1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (15:08 IST)

அஸ்ஸாம், சிக்கிம் மாநிலங்களைத் தொடர்ந்து காஷ்மீரியிலும் நிலநடுக்கம்

அஸ்ஸாம், சிக்கிம் மாநிலங்களைத் தொடர்ந்து காஷ்மீரியிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளளனர்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில்  நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த  நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவாகியுள்ளது.

இதுவரை 43 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து அண்மையில், ரோமானியா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்காவின் ஓசன்வியூ, காங்கோ ஆகிய பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவிலும், நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி, அஸ்ஸாம், சிக்கிம், மேகாலயா ஆகிய பகுதிகளில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.  சிக்கிமில்  ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில்,காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காத்ரா நகரில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  3.8 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.