செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (07:38 IST)

அந்தமானில் திடீர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

உலகில் ஒருசில நாட்களுக்கு ஒருமுறை நிலநடுக்கங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலை இந்தியாவின் அந்தமான் தீவுகளில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் என்ற அளவில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு தெரிந்ததாகவும் இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் உள்ள டிகலிப்பூர் என்ற பகுதியில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரிய அளவில் எந்த சேதமும் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது
 
அதேபோல் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்றும் இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் இந்தியாவில் மட்டுமின்றி மியான்மர் உள்ளிட்ட சில நாடுகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது