ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை..!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி, ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்க யுஜிசி வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளங்கலை, முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பின் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில், ஆண்டுக்கு இரண்டு முறை உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்றும், உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை ஆகியவை குறித்து உயர்கல்வி நிறுவனங்களே முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளங்கலை பட்டப்படிப்பு படிக்க எந்த பாடப்பிரிவை பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விரும்பிய இளங்கலை படிப்பு படிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளையும், முதுகலையில் இரண்டு பட்டப்படிப்புகளையும் படிக்கலாம் என்றும், மாணவர்களின் குறைந்தபட்ச வருகை பதிவு மற்றும் தன்னாட்சி அமைப்பு ஒப்புதல் உடன் இதை மாணவர்கள் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து அம்சங்களும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் இருப்பதை அடுத்து இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழகத்தில் புதிய தேசிய கொள்கை அமல்படுத்தவில்லை என்பதால் பிளஸ் டூவில் படிக்கும் பாடப்பிரிவருக்கு ஏற்பவே பட்டப் படிப்பை தேர்வு செய்ய முடியும் என்பதும், ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்க சாத்தியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran