திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 மே 2024 (18:21 IST)

18 வயது நிரம்பாமல் வாகனம் ஓட்டினால் ஆர்.சி ரத்து.. லைசென்ஸ் கிடைக்காது! – ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள்!

Traffic
18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் குறித்த புதிய விதிமுறைகள் ஜூன் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.



நாடு முழுவதும் இருசக்கர வாகனங்கள், கார்கள் புழக்கம் அதிகரித்துவிட்ட நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டுனர் உரிமம் பெற 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் 18 வயது கூட நிரம்பாத சில சிறுவர்கள் வாகனங்களை சாலையில் ஓட்டுவதுடன் விபத்துகளையும் ஏற்படுத்தி விடுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இதனால் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் புதிய விதிமுறைகள் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, 18 வயது நிரம்பாத சிறுவர்கள் யாராவது வாகனம் ஓட்டி வந்து பிடிபட்டால் அந்த வாகனத்தின் ஆர்.சி ரத்து செய்யப்படும். மேலும் வாகனம் ஓட்டி வந்த சிறுவனுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், 25 வயது வரை லைசென்ஸ் பெற தடையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K