பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை!
பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை!
பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு மரியாதை செலுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன
கடந்த 8ஆம் தேதி பிரிட்டன் ராணி எலிசபெத் காலமான நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாளை இராணியின் இறுதி சடங்கு நடைபெற இருக்கும் நிலையில் உலகின் பல நாட்டு தலைவர்கள் லண்டனுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்தியாவின் சார்பில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் இந்த இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இன்று லண்டன் வெஸ்மின்ஸ்டரில் வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு இந்திய குடியரசு தலைவர் மரியாதை செலுத்தினார். மேலும் நாளை நடைபெற உள்ள ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.