நாய் கடித்ததால் நாய் ஓனரை கட்டையால் அடித்து நொறுக்கிய எதிர்வீட்டினர்.. அதிர்ச்சி தகவல்..!
ஹைதராபாத்தில் நாய் கடித்ததால் நாயின் ஓனரை எதிர் வீட்டில் உள்ளவர்கள் மரக்கட்டையால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்கள் ஆகவே தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது என்பதும் இதனை அடுத்து நாய் கடித்தால் அந்த நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் ஸ்ரீநாத் என்பவர் வெளிநாட்டு ரக நாயை வளர்த்து வந்த நிலையில் அந்த நாய் அடிக்கடி எதிர் வீட்டுக்கு சென்று அவர்களை கடித்து வருவதாக கூறப்பட்டது. எதிர் வீட்டில் உள்ளவர்கள் நாயை கட்டி போடும்படி கூறியும் அந்த நாயின் உரிமையாளர் கேட்கவில்லை என்பதை அடுத்து நேற்று திடீரென மீண்டும் நாய் கடிக்க வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த எதிர்வீட்டினர் நாயின் ஓனரையும் நாயையும் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து படுகாயம் அடைந்த நாய் மற்றும் நாயின் ஓனரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
Edited by Siva