புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (14:14 IST)

பிரதமர் மோடி தூங்குவது எத்தனை மணி நேரம் தெரியுமா ?

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே  இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று மூன்றாவது கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நம் நாட்டின் பிரதமர் மோடியின் இல்லத்துக்குச் சென்ற பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் அவரிடம் பேட்டி எடுத்தார். அப்போது மோடி  பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அதில் மோடி  கூறியுள்ளதாவது :
 
நான்  சிறுவயதில் அம்மாவை விட்டு பிரிந்து  வந்துவிட்டேன். நான் ராணுவத்தில் சேவையாற்ற நினைத்து அதற்காகவே பல தலைவர்களின் வரலாற்றைத் தேடிப்படிப்பதில் விருப்பம் உண்டு.
 
நான் பிரதமராக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. எனக்குக் கோபம் வராததை பார்த்து மக்கள் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். 
 
நான் சன்னியாசியாகத்தான் முதலில் விரும்பினேன். முக்கியமாக நான் கோபப்படும்படி எந்த சூழ்நிலையையும் உருவாக்கவில்லை. நாம் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்னர் என்னிடம் வங்கிக்கணக்கு கூட இல்லை என்று தெரிவித்தார்.
 
மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா என்னைச் சந்திக்கும் போதெல்லாம் நீண்டநேரம் தூங்குகிறீர்களா என்று கேட்பார் என்று தெரிவித்தார். 
 
இதற்கு அக்சய்குமார், தினமும் நீங்கள் 3 - 4 மணி நேரங்கள் தான் தூங்குகிறீர்கள், ஆனால் மனிதனின் உடலுக்கு 7 மணி நேரத்தூக்கம் அவசியம் என்று வினா தொடுத்தார்.
 
இதற்குப் மோடி கூறியதாவது: என்னை முதலில் சந்தித்தபோது இதைத்தான் கேட்டார்.. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று என் தூக்கத்தைப் பற்றி கேட்பார். ஆனால் நான் 3- 4 மணி நேரத்துக்கு மேல் உறக்கம் அவசியமில்லை என்று கூறினேன் இவ்வாறு மோடி தெரிவித்தார்.