ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (18:16 IST)

டேன்ஜ்ர் லிஸ்டில் தோனி, சச்சின், சன்னி லியோன், ராதிகா அப்தே...

கிரிக்கெட் வீரர் தோனி, சச்சின் மற்றும் நடிகைகள் சன்னி லியோன், ராதிகா  அப்தே ஆகியோரின் பயரை இணையதளத்தில் தேடும் போது சில வேறு இணைய லிங்கிற்குள் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
பிரபலங்களின் பெயர்களை ஆன்லைனில் தேடும்போது, அது தொடர்பாக திரையில் காட்டப்படும் சில லிங்குகள் சில நேரங்களில், பயனாளர்களை பாதுகாப்பற்ற சில இணையதளங்களுக்கு கொண்டுசென்று அவர்களது சுய தகவல்கள் தவறான நோக்கத்திற்காக சுரண்டுகின்றன.
 
அந்த வகையில் மெக்கபீ என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம், இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பெயரை ஆன்லைனில் தேடும்போதே, அதிகமான நபர்கள், தீங்கு இழைக்கக்கூடிய பிற இணையதளங்களுக்கு மறைமுகமாக இழுத்துச்செல்லப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
 
ஆம், இந்த லிஸ்டில் முதல் இடத்தில் தோனியின் பெயரும், 2ஆவது இடத்தில் சச்சின் டெண்டுல்கரின் பெயரும்,  சன்னி லியோன் மற்றும் ராதிகே ஆப்தே ஆகியோரின் பெயர்கள் 4 மற்றும் 6 வது இடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.