பாரீஸில் காதலியுடன் ஜல்ஸா செய்து ஊர் சுற்றும் "டூப்" தோனி!

Papiksha| Last Updated: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (12:07 IST)
கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த MS. டோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் டோனி  கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் . பாலிவுட் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ஹேண்ட்ஸம் ஹீரோவாக வலம் வரும் இவர்  ரியா சக்ரவர்த்தி என்ற பாலிவுட் ஹீரோயினை காதலித்து வருகிறார். 


 
இந்த தகவல் கேட்டவுடனே சுஷாந்த் சிங்கின் பெண் ரசிகைகள் அதிர்ந்துவிட்டனர். இருந்தாலும் அவருக்கு பெண் ரசிகர்களின் அன்பு தொல்லை அடிக்கடி இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தனது காதலி  ரியா சக்ரவர்த்தியுடன் இத்தாலியின் கேப்ரி என்ற நகரில் தனது விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர். அங்கு அவர்கள் இருவரும் ஷாப்பிங் சென்ற போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி பாலிவுட் சினிமாவின் தலைப்பு செய்தியாக பார்க்கப்பட்டு வருகிறது. 


 
சில நாட்களுக்கு முன்பு, அவர்கள் இருவரும் பிரான்சின் பாரிஸில் சுற்றித் திரிந்தனர். சுஷாந்த் மற்றும் ரியா இருவரும் நீண்ட காலமாக டேட்டிங் செல்வதாக வதந்திகள் வந்தாலும் அதை பற்றி இருவரும் உறுதிப்படுத்தவில்லை. அண்மையில் கூட பிரபல பாலிவுட் ஊடகம் ஒன்றில் "நீங்கள்"  சிங்கிளாக இருக்கிறாரா கேட்டபோது, அதற்கு சுஷாந்த் சிங், இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களுக்கு நான் பதிலளிக்க வேண்டும் என்றால் நிறைய பணம் கேட்பேன் என கிண்டலாக கூறியிருந்தது  குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :