செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 மே 2022 (10:53 IST)

சொன்ன பேச்சை கேட்காததால் டிஜிபியை டிஸ்மிஸ் செய்த உபி முதல்வர்!

Yogi
முதலமைச்சர் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதிக்காததால் டிஜிபி டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநில டிஜிபி ஆக கடந்த 2021 ஆம் ஆண்டு முகுல் கோயல் என்பவர் பதவி ஏற்றார். ரவுடியிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்துக்களை ஒழித்தவர் என்ற பெயர் இருக்கும் நிலையில் இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் உத்தரவுக்கு மாறாக செயல்பட்டதாகவும் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது 
 
இந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு சென்ற நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முகுல் கோயல்லை நேரில் அழைத்து கண்டித்ததாகவும் தெரிகிறது. ஆனாலும் தனது செயல்பாடுகளை மாற்றி கொள்ளாததால் டிஜிபி பதவியில் இருந்து அவரை நீக்கி ஊர்க்காவல் படை இயக்குனராக மாற்றப்படுவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது