திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (13:29 IST)

இனி கைதிகளை காவல் நிலையத்தில் வைக்க கூடாது!? – டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!

Sylendra Babu
சமீபத்தில் விசாரணை கைதிகள் சிலர் காவல் நிலையத்தில் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சாத்தான்குளத்தில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை கைதிகள் மரணம் குறித்த பெரும் விவாதங்கள் எழுந்துள்ளது.
Sylendra Babu

இந்நிலையில் அனைத்து மாவட்ட காவல்நிலையங்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ள தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, இனி விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் விசாரிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். மாலை 6 மணிக்கு மேல் அவர்களை காவல் நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்றும், 6 மணிக்குள் சிறைச்சாலையில் விட்டுவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

சமீப காலமாக விசாரணை கைதிகள் மரணம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த உத்தரவால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.