Daily Horoscope
✕

வேட்டியை தூக்கி பிடித்து என்னா ஓட்டம்.... வைரலாகும் தேவகவுடாவின் வீடியோ!

Updated: செவ்வாய், 19 நவம்பர் 2019 (16:47 IST)
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் தந்தையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய நபருமான தேவகவுடா கர்நாடகாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துக்கொண்டார். 
 
கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா பாண்டிகையை ஒட்டி நடக்கும் மாரத்தான் போட்டி மிகவும் பிரபலமானது. சிறியவர்கள், முதியவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக இந்த மாரத்தான் போட்டி நடக்கும். 
 
இந்நிலையில் மாரத்தான் போட்டியில் தேவ கவுடா கலந்து கொண்டார். 65 நிரம்பிய இவர் அந்த மாரத்தான் போட்டியில் எல்லோருடனும் சேர்ந்து ஓடினார். இந்த வயதிலும் இவர் இவ்வாறு ஓடுவது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 
 
ஆனால், அவர் திடிரென தடுக்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கிவிட. மீண்டும் ஓடத்துவங்கி விட்டார். இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 

நன்றி: ETvB English

எல்லாம் காட்டு

விமானத்தில் அனுமதி மறுப்பு - ஏர் இந்தியாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம்...

அமெரிக்காவில் எல்லா குழந்தைகளுக்கும் 2 Space பங்குகள் - எலன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

நான் எடுத்த ஆக்சனில் சிலருக்கு பேஸ்மெண்ட் ஆடிப்போச்சி - முதல்வர் விஜய் பேச்சு...

அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே!.. விஜய் டிவி ராமர் ஸ்டைலில் விழாவில் நக்கலடித்த விஜய்...

63 வயதான பெண்ணை கைப்பிடித்த 73 வயது நபர். முதியோர் இல்லத்தில் நடந்த திருமணம்...

அடுத்த கட்டுரையில்
Show comments