வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (15:35 IST)

”பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும்” பற்றி இனி பக்தர்கள் கவலைப்படத் தேவையில்லை…தேவசம் போர்டின் புதிய சட்டம் என்ன?

சபரிமலை பக்தர்கள் வசதிக்காக, ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தேசவம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில், உலக பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும். இங்கே நடைபெறும் மண்டல பூஜையின்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இந்நிலையில் தற்போது ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவையை தொடங்கவுள்ளதாக சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இதற்காக கேரளாவின் நெடுவஞ்சேரி விமான நிலையம் அருகே உள்ள காலடி எனும் இடத்தில் ஹெலிகாப்டருக்கான தளம் அமைக்கப்பட உள்ளது. ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள், ஹெலிகாப்டர் மூலம் காலடியில் இருந்து நிலக்கல் வரை செல்லலாம். இதற்காக காலடியிலிருந்து நிலக்கல்லுக்கும், நிலக்கல்லிலிருந்து காலடிக்கும் தினமும் 6 முறை ஹெலிகாப்டர் சென்று வரும் வகையில் தேவசம் போர்டு ஏற்பாடு செய்ய திட்டமிட்டு வருகிறது. அதாவது காலை 7 மணிக்கு தொடங்கப்படும் ஹெலிகாப்டர் சேவை மாலை 4.15 மணி வரை இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வருகிற நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறவிருக்கும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை ஆகியவை ஒட்டி, இந்த ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.