1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (20:19 IST)

பெண் சாமியாரிடம் ஆசி பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண் சாமியாரிடம் சீருடையில் ஆசி பெற்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 
இந்திரபால் சிங் என்பவர் டெல்லி ஜனக்புரி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் உத்தம் பகுதியில் உள்ள பெண் சாமியாரிடம் சீருடையில் ஆசி வாங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
 
இந்திரபால் சிங் சீருடையில் இருந்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை துணை கமிஷனர் விஜய் குமார் இன்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.