உங்க அதிகாரம் எல்லாம் டெல்லில மட்டும் தான், இங்க நாங்க தான் கெத்து - மத்திய அரசை சீண்டிய செல்லூர் ராஜு
மத்திய அரசை அவ்வப்போது வம்பிலிக்கும் லிஸ்டில் இருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ, உங்க அதிகாரம் எல்லாம் டெல்லில மட்டும் தான், இங்க நாங்க தான் எல்லாம் என கூறியுள்ளார்.
மத்திய அரசை புகழ்ந்து பேசி வந்த அதிமுகவினர் சமீப காலமாக, மத்தியில் உள்ளவர்களை சீண்டும் விதமாகவே பேசி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்திருக்கிறது என்றார். முதலில் இதனை பூசி மழுப்பிய அதிமுக அமைச்சர்கள் பின் என்ன ஆனது என்று தெரியவில்லை மத்திய அரசின் மீதும் அமித்ஷா மீதும் பாய்ந்தனர்.
இந்நிலையில் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ, என்ன தான் பவர் இருந்தாலும் மத்திய அரசின் வேலைகளை டெல்லியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் அவர்கள் வேலையை காட்டக்கூடாது.
இங்கு எல்லாமே நாங்கள் தான். தமிழகத்தை மாநில கட்சிகள் தான் ஆள வேண்டும் என தெரிவித்தார்.