புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (12:39 IST)

டெல்லி மழை; வீடுகளை அடித்து செல்லும் வெள்ளம்! – பதற செய்யும் வீடியோ!

டெல்லியில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டோடும் நிலையில் வீடுகளை வெள்ள நீர் இடித்து கொண்டு செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மூன்றாவது மாநிலமான டெல்லியில் தற்போது கனமழை பொழிந்து வருகிறது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், பல தெருக்களும், தாழ்வான குடியிருப்புகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

விடாது பெய்த மழையால் டெல்லி மிண்டோ பாலத்திற்கு அடியில் தண்ணீரில் பேருந்து ஒன்று மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஐடிஓ மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் உள்ள குடியிருப்புகள் பக்கமாக கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் வீடுகள் அரிந்து வெள்ளத்தோடு அடித்து செல்லப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.