1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 19 ஜூலை 2020 (11:52 IST)

செய்தி வாசிக்கும் போதே கழண்டு விழுந்த பல் - தொகுப்பாளினிக்கு குவியும் பாராட்டுகள்!

உக்ரைனில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் செய்தி வாசித்துக் கொண்டு இருக்கும்ப்போதே பல் கழண்டு விழுந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

உக்ரைன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் மரிக்சா பதல்கோ. இவர் சமீபத்தில் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டு இருந்த போது அவரின் முன்வரிசைப் பல் கழண்டு விழுந்தது. ஆனாலை அதைப் பற்றி கவலைப்படாமல் பல்லை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு தொடர்ந்து செய்தியை வாசிக்க ஆரம்பித்தார்.

இந்த வீடியோவானது இணையதளத்தில் இப்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த செய்தி வாசிப்பாளருக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  சில ஆண்டுகளுக்கு முன்னால் தனது குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தபோது அவரது பல் உடைந்து அதற்குப் பதில் செயற்கையான பல் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.