பிரதமர் மோடியை கண்டித்து போஸ்டர்! – டெல்லியில் ஆசாமிகள் கைது!
டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நபர்கள் கைடு செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடெங்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அதில் நாட்டில் மக்களுக்கு தடுப்பூசி தேவை உள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி தடுப்பூசியை அனுப்புவதாக குற்றம் சாட்டியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பலர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் இதுவரை 17 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொழில்முறை போஸ்டர் ஒட்டுபவர்கள் என கூறப்படும் நிலையில் போஸ்டரை அச்சடித்தது யார் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.