புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (12:53 IST)

காற்று மாசுபாடுக்கு அண்டை மாநிலங்களே காரணம்! – டெல்லி அமைச்சர் குற்றச்சாட்டு!

டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களே காரணம் என டெல்லி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் கடந்த சில காலமாக காற்று மாசுபாடு அதிகரிப்பால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் மோசமான சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து பேசியுள்ள அமைச்சர் கைலாஷ் கெலாட் “டெல்லி அரசு, காற்று மாசைக் கட்டுபடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனினும் அண்டை மாநிலங்களும் காற்று மாசுபாட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் காற்று மாசு பிரச்சினை என்பது டெல்லியை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல. இது என்.சி.ஆர், அரியானா மற்றும் பிற பக்கத்து மாநிலங்களுடன் தொடர்புடையது” என அவர் தெரிவித்துள்ளார்.