என் கழுத்தை வெட்டிக் கொள்வேனே தவிர ஒருபோதும் தலைகுனிய மாட்டேன் மணீஷ் சிசோடியா
என் கழுத்தை வெட்டிக் கொண்டாலும் வெட்டி கொள்வேனே தவிர ஒருபோதும் தலைகுனிய மாட்டேன் என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசொடிய அவர்கள் தெரிவித்துள்ளார்
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீட்டில் சமீபத்தில் சிபிஐ சோதனை செய்தது என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த வழக்குகள் விறுவிறுப்பாக நகர்த்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை முடித்து வைப்பதாக தனக்கு தூது அனுப்பப் பட்டதாகவும் என் கழுத்தை வெட்டிக் கொண்டாலும் கொள்வேனே தவிர ஒருபோதும் தலைகுனிய மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்றும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்றும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காட்டமாக தெரிவித்துள்ளார்