மணிஷ் சிசோடியாவுக்கு நாட்கள் விசாரணை காவள்: நீதிமன்றம் அனுமதி..!
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அவரை விசாரணைக்கு அழைத்து இருந்த சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர் என்பதும் மணிஷ் சிசோடியா கைது குறித்து விளக்கம் அளித்து சிபிஐ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Edited by Siva