டெல்லி மேயர் தேர்தலில் கைகலப்பு : பாஜக-ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதல்
டெல்லி மேயர் தேர்தலில் கைகலப்பு : பாஜக-ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதல்
டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பு காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சி தேர்தலில் 104 வார்டுகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் இன்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது
இந்த அறிவிப்பிiன் போது திடீரென பாஜக ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Edited by Mahendran