1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (08:10 IST)

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவாரா? ஆம் ஆத்மி நிர்வாகி தகவல்..!

மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்வால் அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பிய நிலையில் சமீபத்தில் மூன்றாவது முறை சம்மன் அனுப்பப்பட்டது.


ஆனால் டெல்லி முதல்வர்  ஆஜராக முடியாது என்று அறிவித்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  கைது செய்யப்படலாம் என  ஆம் ஆத்மி மூத்த நிர்வாகி அதிசி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தார் இந்த பதிவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவாரா? அவ்வாறு கைது செய்யப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva