வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2019 (15:09 IST)

’ த கிரேட் காளி ’ எடுத்த முடிவு : வலுக்கும் எதிர்ப்பு : உச்சகட்ட பரபரப்பு

உலகில் தலைசிறந்த பொழுதுபோக்கு விளையாட்டாக கருதப்படுவது டபல்யூ. டபல்யூ.ஈ(wwe) எனப்படும் குத்துச்சண்டை ஆகும். அமெரிக்கா மற்றும் ஒருசில இடங்களில் நடத்தப்படும் இவ்விளையாட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உலகெங்கும் உண்டு. இந்தக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று புகழ் பெற்றவர்தான் தலீப் சிங் ராணா  என்ற ’த கிரேட் காளி ’ஆவார்.
இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.  சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள  காளி,  தற்போது ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவருகிறார்.
 
 
கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ஜாதவ்பூர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் அனுபம் ஹஸ்ராவுக்கு ஆதரவாக கிரேட் காளி பிரசாரம் செய்தார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணாமுள் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காள மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.
 
மேலும் இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளதாவது :
 
அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஒருவர் இந்தியாவில் எப்படி பிரசாரம் செய்யமுடியும் ?  என்று கேள்வி எழுப்பியதுடன் காளியின் பிரபலத்தை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.