வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 19 டிசம்பர் 2024 (14:06 IST)

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

tirupathi
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருப்பதி செல்லும் பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட் உள்பட பிற டிக்கெட்டுக்களை தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு மாதத்திற்கான தரிசன டிக்கெட் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நேற்று முதல் அதாவது டிசம்பர் 18 முதல் வெளியிடப்பட்டு வருவதாகவும் அதனை பக்தர்கள் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்ட தளம் போன்ற ஆர்ஜித சேவைகளுக்கு டிக்கெட்டுகள் பெற்றுக் கொள்ளலாம்.   டிக்கெட் ஒதுக்கீடு பெற்றவர்கள் 22ஆம் தேதிக்குள் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜித சேவை மற்றும் தரிசனம், தங்கும் இடம் டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டும் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.


Edited by Siva