தினமும் பல மணி நேரம் கரண்ட் கட் - தோனியின் மனைவி ‘டுவிட் ’
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சியில் தினமும் 4 முதல் 7 மணி நேரம் மின்வெட்டி இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
’ராஞ்சியில் தினமும் 4 முதல் 7 மணி நேரம் கரண்ட் கட் ஆகிறது. இங்குள்ள மக்கள் தினமுன் மின்வெட்டை அனுபவித்து வருகின்றனர். இன்றும் (19- நேற்று) கூட பல மணிநேரம் மின்வெட்டு இருந்தது. இங்கு மின்வெட்டி நிகழ்வதற்கான காலநிலையும் சூழல் மற்றும் திருவிழாவும் இல்லை. இருப்பினும், இந்த மின்வெட்டுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
சாக்ஷியில் பதிவுக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் லைக்குகள் இட்டுள்ளனர்.