புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (16:48 IST)

அநீதிக்கு எதிராகப் போராடாதவர்கள் கோழைகள் - பிரியங்கா காந்தி !

நாட்டில் நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்காதவர்கள் அனைவரும்  கோழைகள் என்று கருதப்படுவார்கள் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது உள்ள பொருளாதார மந்தநிலைக்கு பாஜக அரசின் தவறான கொள்கைகளே என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், தற்போது நாட்டில் பெரும் பூதாகரமாய் எழுந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மற்றும் காஷ்மீர் 370 சட்டப் பிரிவு நீக்கம், வேலைவாய்பின்னை ஆகிய பிரச்சனைகளைக்  கண்டித்து, இன்று, பிற்பகலில் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
 
இப்பேரணி ராகுல் காந்தி தலைமையில் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
 
இதில் பங்கேற்றுப் பேசிய பிரியங்கா காந்தி, நாட்டில் நடந்து வரும் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடாதவர்கள் கோழைகள் என கருதப்படுவார்கள் எனவும், நம் அமைதியாய் இருந்தால் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் அழிக்கப்பட்டு நாட்டில் பிரிவினை ஆரம்பித்து விடும் என தெரிவித்தார்.