செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:28 IST)

எல்லைய மீறி போறீங்கடா டேய்... பசுக்களுக்கு சுயம்வரமாம்!!

மத்திய பிரதேசத்தில் பசுக்களுக்கு சுயம்வரம் நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஆம், மத்திய பிரதேசத்தில் பசுகளுக்கு சரியான காளையை அதன் உரிமையாளர்கள் தேர்வு செய்யும் சுயம்வரத்தை அம்மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. 
 
உள்ளூர் காளை இனங்களில் இருந்து 200 காளைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாநில கால்நடைத்துறையால் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் காளைகள் வகை படுத்தப்பட்டு, ஒவ்வொரு காளையின் இனம், வயது, எடை, அதன் தாய் தந்தை குறித்த தகவல், நோய் தாக்கம், காளையின் தாயின் பால் உற்பத்தி அளவு குறித்த தகவல் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. 
 
இந்த பட்டியலை மாநில கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ் வெளியிட்டிருக்கும் நிலையில் இதன் அடிப்படையில் பசுக்கான காளையை உரிமையாளர்கள் சுயம்வரம் போல தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.