புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (08:32 IST)

கோவாக்சின் & கோவிஷீல்டு வேக்சினுக்கு 110 நாடுகளில் அங்கீகாரம்!

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளையும் உலகம் முழுவதும் 110 நாடுகள் அங்கீகரித்துள்ளன. 

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.   
 
இந்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் சர்வதேச அளவில் அங்கீகாரங்களை பெற்று வருகின்றன. ஆம், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளையும் உலகம் முழுவதும் 110 நாடுகள் அங்கீகரித்துள்ளன. 
 
மேலும் மீதமுள்ள மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதோடு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காட்டினால் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எளிதில் சென்று வர முடியும்.