வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (13:49 IST)

கண்ணிலே.. கண்ணீரிலே... கொரோனா பரவுமா??

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் இருந்து வடியும் கண்ணீரில் வைரஸ் பரவுமா என ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. 
 
காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை கோரனாவில் அறிகுறிகள் என கூறப்பட்டு வந்த நிலையில், கண்கள் சிவப்பதும் கொரோனாவின் அறிகுறி என American Academy of Ophthalmology தகவல் தெரிவித்துள்ளது.  
 
கண்கள் சிவந்தும், கண்களில் அழுக்கு வெளியேறியபடி வெண்படலம் படர்ந்த அறிகுறிகளுடன் 1 முதல் 3% மக்கள் கொரோனா தாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களின் கண்களில் இருந்து வழியும் கண்ணீரில் வைரஸ் பரவுமா என ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. 
 
சிங்கப்பூரில் உள்ள தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கண்ணீரில் வைரஸ் இருப்பது கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மூக்கு மற்றும் தொண்டையில்  முற்றிலும் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாம். 
 
எனவே கண்ணீரின் மூலம் வைரஸ் பரவாது என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.