செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (13:17 IST)

அழகிய முகக் கவசங்களை வழங்கிய வணிக வளாகம் !

அழகிய முகக் கவசங்களை வழங்கிய வணிக வளாகம் !

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில்  உள்ள பெயர் பெற்ற ஒரு வணிக வளாகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு அழகான முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சுமார் 24 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இதுநாள் வரை இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய குளிர் பிரதேசங்களை வாட்டி வந்த கொரோனா, இன்று அமெரிக்காவில் அதிக மக்களை 1295 பேரை  பலி கொண்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அங்கு நேற்று ஒரேநாளில் 17,166 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 85377 ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் மொத்தம் 5 லட்சத்துக்கும் அதிகமனவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 25 பேர் பலியாகியுள்ளனர்.

இது உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குளிர் பிரதேசமான ரஷ்யாவில், கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க மக்கள் முகக கவசம் அணிந்து நடமாடி வருகின்றனர். மாஸ்கோவில் உள்ள டுசும் என்ற (Tsum) என்ற வணிக வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அழகிய டிரான்பெரண்ட் புரோடக்டிவ் ஸ்கிரீன் (Transparant protectivity  screen ) தன்மை கொண்ட முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், கைக் கிளவுசுகளும், சர்ஜரி முகமூடிகளும் அங்கு வழங்கப்படுகிறது.