செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 நவம்பர் 2024 (14:09 IST)

ரூ.103 டெலிவரி கட்டணம் சேர்த்த ஸ்விக்கி: பெரும் தொகையை அபராதம் விதித்த நீதிமன்றம்

டெலிவரி கட்டணமாக ரூ.130 சேர்த்த ஸ்விக்கி நிறுவனத்திற்கு பெரும் தொகை நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்விக்கி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஒருவரான சுரேஷ் பாபு என்பவர் ஸ்விக்கி ஒன் மெம்பர்ஷிப் சந்தாவை செலுத்தியுள்ளார். இந்த மெம்பர்ஷிப் இருந்தால் ஆர்டர் செய்த உணவுக்கு டெலிவரி கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தான் ஆர்டர் செய்த உணவுக்கு ரூ.17 டெலிவரி கட்டணமாக வசூலிக்கப்பட்டதாகவும், 9 கிலோமீட்டர் தூரமே தான் ஆர்டர் செய்த ஹோட்டலுக்கும் தனது வீட்டுக்கும் தூரம் இருக்க, சுருக்கி செயலியில் 14 கிலோமீட்டர் எனக் காட்டி அதற்கான கட்டணத்தை பெற்றதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பான வழக்கில் ஸ்விக்கி நிறுவனம் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்ற நிலையில், நீதிபதி அதிரடியாக தீர்ப்பை அளித்துள்ளார். அந்த தீர்ப்பில், ரூ.130 டெலிவரி கட்டணம் மற்றும் அதற்கான 9 சதவீத வட்டியுடன் ரூ.350.48 ஸ்விக்கி நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவாக ரூ.5000 மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதற்காக ரூ.5000 மற்றும் மாவட்ட நுகர்வோர் ஆணையத்துக்கு ரூ.25000 நலநிதி வழங்க வேண்டும் என்றும், மொத்தம் ரூ.35453 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை 45 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva