புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (12:15 IST)

ப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து – நீதிமன்றம் சலுகை !

என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு நீதிமன்றம் சலுகைகள் வழங்கியுள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அமலாக்கத்துறை நேற்று கைது செய்துள்ளது. நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு சிதம்பரத்தை விசாரிக்க 7 நாட்கள் அனுமதி அளித்துள்ளது..

மேலும் சிதம்பரத்தின் குடும்பத்தினர் சார்பாக அவருக்கு ‘ வீட்டு சாப்பாட், மேற்கத்திய பாணி கழிப்பறை மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் மற்றும் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என வைக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.