திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (19:30 IST)

”சாமியார் செய்த கொடூரம், கதறி அழுத பெண்”.. வைரல் வீடியோ

பேய் ஓட்டுவதாக ஒரு சாமியார், ஒரு பெண்ணை சவுக்கால் கொடூரமாக அடிக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள ஆவானி என்கிற பகுதியில் மாரிகாம்பா என்ற அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த் கோவிலில் அங்கு ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது, அந்த பேயை ஓட்ட வேண்டும் என மல்லிகார்ஜூன் என்ற பூசாரியிடம் அழைத்து வந்துள்ளனர்.

அந்த பெண் பார்ப்பதற்கே ஆக்ரோஷமாய் இருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணை ஒரு அறைக்கு கூட்டிச் சென்ற பூசாரி, அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து சவுக்கால் அடிக்கிறார், அந்த பெண் கதறி அழுது துடிக்கிறார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்த இணையத்தில் பதிவேற்றியுள்ளார், தற்போது வைரலாகி வருகிறது.