1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 13 மே 2020 (10:07 IST)

இந்தியாவில் 74 ஆயிரத்தை எட்டிய கொரோனா பாதிப்பு!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
 
இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது குறித்த விவரம் பின்வருமாறு.... 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,756 இருந்து 74,281 ஆக உயர்வு,  
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  22,455 இருந்து 24,386 ஆக உயர்வு,  
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 இருந்து 2,415 ஆக உயர்வு,   
 
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43.39 லட்சமாக உயர்வு, வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,00,728 ஆக உயர்வு, வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,92,804 ஆக உயர்வு.