ஒரே நாளில் 2,603 பேர் பலி; 20,557 ஆன தினசரி பாதிப்பு – கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 03 ஆயிரத்து 619 ஆக உயர்ந்தது. புதிதாக 2,603 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,388 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,517 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,32,140 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,43,091 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 200.61 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.