வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (20:54 IST)

பஞ்சாபிலும் நுழைந்தது கொரோனா: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் இந்தியாவிலுள்ள தமிழகம், கேரளா உள்பட ஒருசில மாநிலங்களில் பரவி இருக்கும் நிலையில் தற்போது பஞ்சாபிலும் கொரோனா வைரஸ் நுழைந்து விட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே கொரோனா வைரஸ் கேரளாவில் ஒரு சில நபர்களுக்கும், தமிழகத்தில் ஒருவருக்கும் லடாக் உள்ளிட்ட பகுதிகளிலும் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பஞ்சாப் மாநிலத்திற்குள்ளும் கொரோனா  நுழைந்துவிட்டது. இத்தாலியில் இருந்து பஞ்சாப் திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
இதனையடுத்து கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட மாநிலங்களில் பஞ்சாபும் தற்போது இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனை குழுவினர் இருப்பதால் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது