இன்றும், நாளையும் கொரோனா நோய் தடுப்பு ஒத்திகை: மத்திய அரசு அறிவிப்பு..!
நாடு முழுவதும் இன்றும் நாளையும் கொரோனோ தடுப்பு ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் தமிழகத்தில் சுமார் 200 பேர்களும் நாடு முழுவதும் சுமாரா ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்பதும் ஒரு சில மாநிலங்களில் பொதுமக்கள் வெளியே வரும்போது மாஸ்க் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவமனை, தியேட்டர் போன்ற இடங்களில் மட்டும் மாஸ்க் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் நாளையும் நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தடுப்பு ஒத்திகை செய்யப்படும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Edited by Siva