வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (12:26 IST)

இன்றும் 5000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.. மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

corono virus
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 5000ஐ தாண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5000க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இதுவரை கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 32,814 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது 
 
கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ளி
 
Edited by Siva