1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (16:08 IST)

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை விட 6 - 8 மடங்கு அதிகம்?

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட 6 - 8 மடங்கு அதிகம் என ஆய்வில் தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,27,54,315 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட ஆறு முதல் 8 மடங்கு அதிகமாக இருக்கும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, டெலிகிராப் இந்தியா இணையதளம் தெரிவித்துள்ளது.
 
நவம்பர் 2021 தொடக்கத்தில் 30.2 லட்சம் முதல் 30.7 லட்சம் வரையில், கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையின்படி 4,60,000 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆய்வு பிரான்சின் மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்திய மக்கள்தொகை நிபுணரான கிறிஸ்டோஃப் கில்மோட்டோவால் மேற்கொள்ளப்பட்டது என்பது கூடுதல் தகவல்.