1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:07 IST)

கொரோனா பரிசோதனை: திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை

தமிழகத்தில் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சளி காய்ச்சல் தொண்டை வலி மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் கொண்டவர்கள் கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
 
60 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகப் பிரச்சனை உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
 
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு தண்ட முறையில் பரிசோதனை செய்ய வேண்டும் இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது