ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2024 (08:40 IST)

13000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒப்பந்த தொழிலாளி.. ரூ.21 கோடி மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம்..!

வெறும் 13 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் ரூ.21 கோடிக்கு அரசு பணத்தை மோசடி செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்ரபதி சிவாஜி  நகரில் உள்ள விளையாட்டு வளாகம் ஒன்றில் ஒப்பந்த தொழிலாளராக ஹரிஷ் குமார் பணியாற்றி வருகிறார். இவர் அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் நிலையில், மாதம் ரூ.13,000 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், பிஎம்டபிள்யூ கார், 4 படுக்கையறை கொண்ட வீடு ஆகிய ஆடம்பரங்களுடன் அவர் வாழ்ந்தது மற்றும் தனது காதலிக்கு லட்சக்கணக்கில் பரிசு பொருட்களை கொடுத்தது போன்ற தகவல்களை கேட்டு பணியாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இவருக்கு இவ்வளவு பணம் எவ்வாறு வந்தது என தெரியாமல் அனைவரும் குழம்பிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் மோசடி மூலம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றது தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணையில், மொத்தம் ரூ.21 கோடிக்கு அரசு நிதியை மோசடி செய்ததாகவும், விளையாட்டு வளாகம் என்ற பெயரில் ஒரு வங்கி கணக்கை தொடங்கி, போலி ஆவணங்கள் பயன்படுத்தி துணை இயக்குனர் போல கையெழுத்துகளை போட்டு மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது, ஹரிஷ் குமாரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Edited by Siva