செவ்வாய், 4 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 மார்ச் 2025 (09:58 IST)

காங்கிரஸ் பெண் பிரமுகர் கொலை! பிணத்தை சூட்கேஸில் இழுத்து சென்ற கொலையாளி! - அதிர்ச்சி வீடியோ!

Himani Murder Case

ஹரியானாவில் காங்கிரஸ் பெண் பிரமுகர் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது உடலை கொலையாளி சூட்கேஸில் வைத்து எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹரியானா மாநிலம் ரோதக் பகுதியை சேர்ந்த ஹிமானி நர்வால் என்ற பெண் சமீபத்தில் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பிரமுகரான ஹிமானி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு கொலையாளி தேடப்பட்டு வந்த நிலையில் சச்சின் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளம் மூலமாக ஹிமானியுடன் பழகி வந்ததாகவும், பணம் தொடர்பான விவகாரத்தில் ஹிமானியை அவர் கொன்றதாகவும் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ஹிமானியை செல்போன் சார்ஜிங் கேபிளால் கழுத்தை நெறித்துக் கொன்ற அவர், பிணத்தை சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K