1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (11:51 IST)

காங்கிரஸ் முடிவுக்கு எதிராக காங்கிரஸினர் போராட்டம்! – டெல்லியில் பரபரப்பு!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து டெல்லியில் ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலம் முன்பு காங்கிரஸாரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் தோல்வியையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து காங்கிரஸின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வரும் நிலையில் அடுத்த தலைவருக்கான பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்பது குறித்து டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் தலைவராக காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரமாட்டார்கள் என கூறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் தலைவராக வரவேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தங்கள் சொத்த அலுவலம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.