இதுல ஏதோ முறைகேடு இருக்கு.. முதல்ல இருந்து ஓட்டை எண்ணுங்க! – தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி 125 இடங்களையும், காங்கிரஸ் – தேஜஸ்வி யாதவ் கூட்டணி 110 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவை என்னும் நிலையில் 125 இடங்களை கைப்பற்றியுள்ள பாஜக கூட்டணி பீகாரில் ஆட்சியமைக்க உள்ளது.
இந்நிலையில் தேர்தல் வாக்குகளை எண்ணுவதில் நிதிஷ் குமார் முறைகேடு செய்துள்ளதாகவும், அதனால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை கடந்த 15 ஆண்டுகளாக நிதிஷ் குமார் வழங்கி வரும் ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என நிதிஷ்குமார் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.