தொடர்புடைய செய்திகள்
- 12 தொகுதிகளில் முதல்வர் பதவியை கோட்டைவிட்ட லாலு பிரசாத் மகன்!
- பீஹார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி
- மபி, உபி, கர்நாடகா இடைத்தேர்தல்: பாஜக சூப்பர் வெற்றி
- முருகர் உங்களை காக்க மாட்டார்... காங். சாடிய பொன்னார் !!
- வேலை வெச்சுக்கிட்டு நீங்க பண்ணுன வேலையெல்லாம் டிவில பாத்தோம்! – பாஜகவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
எதிர்க்கட்சியை மட்டுமல்ல, கூட்டணி கட்சியையும் போட்டு தள்ளிய பாஜக!
பீகார் மாநிலத்தில் பாஜகவின் அபாரமான வியூகத்தால் எதிர்க்கட்சிகளை மட்டுமின்றி சொந்த கூட்டணி கட்சியையும் போட்டு தள்ளி உள்ளது என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவருகிறது
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளமும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா 110 தொகுதிகளில் போட்டியிட்டது என்பதும் ஐக்கிய ஜனதா 115 தொகுதிகளில் போட்டியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆனால் பாஜக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஐக்கிய ஜனதா தளமும் வெறும் 45 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் செல்வாக்கை பயன்படுத்தி பாஜக 75 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டு, தனது சொந்த கூட்டணி கட்சியின் வெற்றியை தடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதே பாணியைத்தான் தமிழகத்திலும் கடை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்த கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்று, அதிமுகவை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற பாஜக திட்டமிடும் என்று கூறப்படுவதால் அதிமுக உஷாராக இருக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்
