வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2024 (15:08 IST)

காங்கிரஸ் கூட்டணி ஒரு ப்ரேக் இல்லாத வண்டி.. யார் டிரைவர்னுதான் அங்க சண்டையே! - பிரதமர் மோடி கடும் தாக்கு!

PM Modi speech

Maharashtra assembly election: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ள பிரதமர் மோடி காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

 

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இந்த மாதம் நடைபெறும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜகவுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவின் துலே நகரில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸின் மகா விகாஸ் அகாடி கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

அதில் பேசிய அவர் “மகாராஷ்டிரா மக்களுடன் எனக்கு நெருக்கமான உறவு உண்டு. நான் ஏதாவது கேட்டபோதெல்லாம் மராட்டிய மக்கள் எனக்கு முழு மனதுடன் ஆசீர்வாதம் அளித்தார்கள். மக்களை நாங்கள் கடவுளின் மற்றொரு வடிவமாக பார்க்கிறோம். ஆனால் சிலரோ மக்களை கொள்ளையடிப்பதற்காகவே அரசியலுக்கு வருகின்றனர்.
 

 

காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அப்படியான ஒரு கொள்ளையடிக்கு கூட்டணிதான். அவர்கள் மகாராஷ்டிராவின் வளர்ச்சியை தடுக்கிறார்கள். அந்த கூட்டணி கட்சியினர் அரசாங்கம் அமைக்கும்போது ஒவ்வொரு அரசாங்க கொள்கையிலும் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். இந்த அரசாங்கத்தின் செயல்பாட்டை கடந்த இரண்டரை ஆண்டுகளாக பார்த்துக் கொண்டுள்ளீர்கள்.

 

மகா விகாஸ் அகாடி என்பது சக்கரங்கள், ப்ரேக்குகள் இல்லாத ஒரு வாகனம். அதிலுள்ள அனைவரும் ஓட்டுனர் இருக்கையில் அமர சண்டை போடுகிறார்கள். எதிர்கட்சியினர் பெண்களை அவமதித்தும், துஷ்பிரயோகம் செய்தும் வருகின்றனர். எங்களது அரசாங்கம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவருக்குமாக பணியாற்றி வருகிறது. ஆனால் அனைத்து சாதிகளும் பிரிந்தே இருக்க வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K