தனது நண்பர்களுக்காக மோடி அரசு விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை- காங்கிரஸ் குற்றச்சாட்டு
தொழிலபதிபர் நண்பர்களுக்காக மோடி அரசு நாட்டின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களை ஏற்றுமதி செய்ய தடைவிதிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
''நாட்டிற்கு உணவு வழங்கும் விசாயிகள் அதிகப்படியான விளைச்சலை உற்பத்தி செய்து, அதை ஏற்றுமதி செய்ய விரும்புகையில் மோடி அரசு, அரிசி, கோதுமிய, வெங்காயம், பருப்பு வகைகள் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை வித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 153 சதவீதம் அதிகரித்த விவசாய ஏற்றுமதி, பாஜக ஆட்சியில் வெறும் 64 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. பாஜக தனது ஆட்சிக் காலம் முழுவதும் விவசாயிகளின் நலன்களை தியாகம் செய்யும் கொள்கையை கடைப்பிடிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ''மத்திய அரசின் எம்.எஸ்.பி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் போலியானது ''என்று தெரிவித்துள்ளார்.