ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜூலை 2024 (17:08 IST)

ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு.! வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் அரசு..!!

hemand soran
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. 

நிலக்கரி சுரங்கத்தை தனக்கு தானே குத்தகை விட்டதாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது பாஜக புகார் அளித்தது. நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
 
இப்படிப்பட்ட சூழலில்தான், முதலமைச்சர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் விலகி, சம்பாய் சோரன் அந்த பதவிக்கு வந்தார். கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி, ஹேமந்த் சோரனை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. இதையடுத்து, கடந்த 4ஆம் தேதி, ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றார்.

இந்நிலையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஜார்க்கண்ட் சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோ நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கினார். இதையடுத்து விவாதம் நடந்தது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.


இதையடுத்து ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  சுயேட்சை உறுப்பினர் சரயுராய் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.