1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (12:47 IST)

ஹரியானா தேர்தலில் போட்டியா.? ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு.!

Rahul
மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

ஹரியானா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் உடல் எடை காரணமாக பதக்க வாய்ப்பை  பறிகொடுத்த வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  

 
ஏனென்றால், ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.